Saturday, October 18, 2014

எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?

எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?

BlueStacks மூலம் கணினியில் ANDROID Application'கலை பயன்படுத்த
இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம்.


1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
____________________
Download BlueStacks
___________________

http://filehippo.com/download_bluestacks_app_player


2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம். 


4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து தேடலாம். 


5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.

6. உங்கள் கணணியில் Viber ஐ பயன்படுத்த வலது கீழ் மூலையில் உள்ள Search Icon இல் Viber என்று தேடுங்கள். பின்னர் Viber App இணை Android Phone - இல் Install செய்வது போன்று Install செய்து கொள்ளுங்கள்.

7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு Pin Number ஒன்று வந்திருக்கும்.

8. Application - ஐ இன்ஸ்டால் செய்து Pin Number - ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம். 

9. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும். 

இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம்.

11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை.

அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp இணையும் பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment