Sunday, October 19, 2014

தர்பூசணியின் பயன்கள்

தர்பூசணியின் பயன்கள்

தர்பூசணியின் பயன்கள்தர்பூசணி பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் பெரும்பாலும் தர்பீஸ் என்று நகர்புரங்களில் அழைப்பார்கள். இப்பழம் வெளிர் பச்சை மற்றும் கரும் பச்சை நிறமும் வரி வரியாக ஒன்றை அடுத்து ஒன்று காணப்படும். இதன் உள்ளே நன்கு சிவந்த உண்ணத்தகுந்த சதை பகுதி காணப்படும். இந்த சதை பகுதி முழுக்க முழுக்க நீர் நிறைந்து காணப்படும். இந்த சதை பகுதியில் கருப்ப நிற கொட்டைகள் அதிகமாக காணப்படும். இது கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் உண்டால் தாகத்தையும் கலைப்பையும் தணிக்க கூடிய அற்புதமான பழம். இதை இயற்கை கடவுள் நமக்கு கோடைகாலத்தில் அளித்த அமுதம் என்றே கூறலாம். இது குளிர்ச்சி குணமும் இனிப்பு சுவையும் கொண்ட பழம். இதில் வைட்டமின் பி1, சுண்ணம்புசத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தை சேர்ந்தது. இப்பழத்தை கோசாப்பழம் என்றும் கூறுவர். இப்பழத்தில் அதிகமாண சத்தும் கிடையாது, தீமையும் கிடையாது. கோடைகாலத்தில் உண்ண உகந்த ஒரு பழம் அவ்வளவுதான். தர்பூசணியின் பிறப்பிடம் தெற்கு ஆப்ரிக்கா என்று நம்பப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டில் சீனாவும் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்கர்களும் இதை பயிர் செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அந்த காலத்தில் ஆப்ரிக்க அடிமைகளே தர்பூசணியை பயிர் செய்ய அமெரிக்கர்களுக்கு உதவிதாக கூறப்படுகிறது.
தர்பூசணியின் மருத்துவ குணங்கள்
சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறநீர் வெளியேறும் சிக்கல் தீரும்.
நீர் கடுப்பையும், மூளைக்கு பலத்தையும் தரக்கூடிய பழம். கர்ப்பிணிப் பெண்கள் இப்பழத்தை உண்ணலாம் குழந்தை அழகாக பிறக்கும் என்கிறார்கள். சீதளம் மற்றும் குளிர்ச்சி தேகம் உடைவர்கள் சிறிதளவே உண்ணவேண்டும். இதை அதிகமாக சாப்பிட்டால் பித்தத்தை தரக்கூடியது.
100 கிராம் தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
  • கார்போஹைட்ரேட் 7.55 g
  • சர்கரை 6.2 g
  • டையட்டரி ஃபைபர் 0.4 g
  • கொழுப்பு 0.15 g
  • புரதம் 0.61 g
  • நீர் 91.45 g
  • வைட்டமின் A 28 μg (4%)
  • வைட்டமின் B1 0.033 mg (3%)
  • வைட்டமின் B2 0.021 mg (2%)
  • வைட்டமின் B3 0.178 mg (1%)
  • வைட்டமின் B 0.221 mg (4%)
  • வைட்டமின் B6 0.045 mg (3%)
  • வைட்டமின் C 8.1 mg (10%)
  • கால்சியம் 7 mg (1%)
  • இரும்பு சத்து 0.24 mg (2%)
  • மக்னீசியம் 10 mg (3%)
  • மாங்கனிஸ் 0.038 mg (2%)
  • பாஸ்பரஸ் 11 mg (2%)
  • பொட்டாசியம் 112 mg (2%)
  • சோடியம் 1 mg (0%)
  • துத்தநாகம் 0.1 mg (1%)
  • கலோரி 30

No comments:

Post a Comment