கரிசலாங்கண்ணி கீரையின் பயன்கள்
மஞ்சள்
காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து அதனுடைய
சாறை எடுத்து காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்கு
கொடுக்க மஞ்சள் காமாலை குணமடையும்.
கல்லீரல்
வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு
அரைத்து மோரில் கரைத்து கொடுத்துவர ஈரல் வீக்கம் குறையுமாம்.
மதவிடாய்
காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில்
கரிசலாங்கண்ணியின் இலைய வேகவைத்து அதை வடிக்கட்டி காலை மற்றும் மாலை இரண்டு
அவுன்ஸ் குடித்துவர நல்ல பலனை காணலாம்.
கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் இட்டு
சூடேற்றி அந்த எண்ணையை தலைக்கு தடவிவர முடி கருத்து நரை ஏற்படுவது மற்றும்
முடி உதிர்வதை தடுக்கும் வல்லமை கொண்டது.
100 கிராம் கரிசலாங்கண்ணி கீரையில் உள்ள சத்துக்கள்
நீர் சத்து = 85%
மாவு சத்து = 9.2%
புரத சத்து = 4.4%
கொழுப்புச் சத்து = 0.8%
கால்சியம் = 62 யூனிட்
இரும்புத் தாது பொருட்கள் = 8.9 யூனிட்
பாஸ்பரஸ் = 4.62%
No comments:
Post a Comment