Tuesday, July 26, 2016

அகத்தியர் மூல மந்திரம்

அகத்தியர் மூல மந்திரம் 
         ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே 
        சாப பாவ விமோட்சனம்  
       ரோக அகங்கார துர் விமோட்சனம்   
        சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் 
        சற்குருவே ஓம் அகஸ்திய 

       கிரந்த கர்த்தாய  நம




அகஸ்தியர் காயத்திரி மந்திரம்
 
ஞானம் உண்டாக

ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்





அகத்தியர் தரிசன அருள் பெற!


வீட்டில் அகத்தியருக்காக ஒரு அறையை தேர்ந்தெடுத்து.அதை கழுவி அதில் மங்சள் நீரை தெளிக்க வேண்டும். அந்த அறையில் அசைவம் கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர் அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர் தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து கீழ் காணும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் பசு பதிபஷராஜ 
நிரதிசய சித்ருப ஞானமூர்த்தாய
தீர்க்க நே த்ராய
கணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம் 
ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன
பாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து.

இவ்வாறு108 தடவை கூற வேண்டும். ”மனதில் தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம். தரிசிப்பவர் முதலில் அவரின் காலில் விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர் தேவையான வரத்தை கேட்கவேண்டும்.அதன் பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல மந்திரத்தை சொல்லுவார். அதை  யாரிடமும் கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும் ஞானகுரு ஆகலாம்.

ஓம் அகத்தியர் திருவடிகள் 108 போற்றி .....



ஓம்  அகத்தீசப்  பெருமானே  போற்றி 
ஓம்  அகிலம் போற்றும்  அறிவுக்கடலே போற்றி
ஓம்  அட்டமா  சித்துகள்  பெற்றவரே  போற்றி 
ஓம்  அகத்தியர்  மலை மீது  அமர்ந்தவரே  போற்றி                       4 

ஓம்  தமிழ்  முனியே  போற்றி 
ஓம்  இறைவனிடம்  தமிழ்  கற்றவரே  போற்றி 
ஓம்  தமிழின்  முதல் தொண்டரே  போற்றி 
ஓம்  தமிழின் முதல்  முனைவரே  போற்றி                                        8
ஓம்  பொதிகைமலை  மாமுனியே  போற்றி 
ஓம்  தவ சீலரே  போற்றி 
ஓம்  சிவ சீடரே  போற்றி 
ஓம்  கும்ப சம்பவரே  போற்றி 

ஓம்  நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 
ஓம்  தன்வந்திரியிடம்  மருத்துவம்  பயின்றவரே  போற்றி 
ஓம்  தேரையருக்கு  மருத்துவம்  பயிற்றுவித்தவரே  போற்றி
ஓம் காமேஸ்வரி  மந்திர  உபதேசம்  பெற்றவரே  போற்றி      16
ஓம்  வயதில் எல்லையில்லா  சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம்  மகா குருவே  போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே  போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 
ஓம்  நவராத்திரி பூஜை கல்பம்  இயற்றியவரே  போற்றி 
ஓம்  நயனவிதி என்ற கண் மருத்துவ நூல் எழுதியவரே போற்றி
ஓம்  விட ஆருட நூல்  தந்தவரே  போற்றி 
ஓம்  மூலிகை அகராதி  அருளியவரே  போற்றி                         24
ஓம் அகத்தியம்  தந்த  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்தியர்  காவியம்  தந்தவரே  போற்றி
ஓம்  அகத்தியர்  வெண்பா அருளியவரே  போற்றி 
ஓம் அகத்திய  நாடி அருளியவரே  போற்றி                                      

ஓம் வைத்திய சிந்தாமணி  தந்தவரே  போற்றி 
ஓம் அகத்தியர் பஷிணி  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்திய  சூத்திரம்  படைத்தவரே போற்றி 
ஓம்  அகத்திய ஞானம்  தந்தவரே  போற்றி                                   32

ஓம் அகத்திய சம்ஹிதை  அருளியவரே  போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம்  தந்தவரே  போற்றி 
ஓம் கிரியை யோகம்  படைத்தவரே போற்றி 
ஓம்  ஆறெழுத்து  அந்தாதி  அருளியவரே  போற்றி                       

ஓம்  வைத்திய கௌமி எழுதியவரே  போற்றி 
ஓம் வைத்திய ரத்னாகரம்  எழுதியவரே போற்றி 
ஓம் வைத்திய கண்ணாடி  தந்தவரே  போற்றி 
ஓம் வைத்திய ரத்ன சுருக்கம்  அளித்தவரே  போற்றி             40

ஓம்  வாகட  வெண்பா  அருளியவரே  போற்றி 
ஓம்  சிவா சாலம்  தந்தவரே போற்றி 
ஓம்  சக்தி  சாலம்  தந்தவரே  போற்றி 
ஓம்  சண்முக சாலம்  தந்தவரே  போற்றி                                          

ஓம் சமரசநிலை  ஞானம்  போதிதவரே  போற்றி 
ஓம்  சக்தி  சூத்திரம்  சமைத்தவரே  போற்றி 
ஓம்  இராமனுக்கு சிவகீதை  அருளியவரே  போற்றி 
ஓம்  ஆதித்ய ஹிருதயம் அருளியவரே  போற்றி                    48
ஓம்  வாதாபியை  வதம்  செய்தவரே  போற்றி
ஓம்   சுவேதனின்   சாபம்  தீர்த்தவரே  போற்றி 
ஓம்  இடும்பனை  காவடி  எடுக்க  வைத்தவரே  போற்றி 
ஓம்  தொல் காப்பியரின்  குருவே  போற்றி

ஓம் கடல் நீரைக் குடித்து  வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே  தவமிருந்தவரே  போற்றி 
ஓம் விந்திய மலையின்  அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம்  அசுராசுரர்களை  அழித்தவரே போற்றி                           56                   

ஓம்  காவிரியைப்  பெருக்கியவரே  போற்றி 
ஓம்  தாமிரபரணியை  உருவாக்கியவரே  போற்றி 
ஓம்  ராவணனை  இசையால்  வென்றவரே  போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம்  அமைத்தவரே  போற்றி 

ஓம்  தேவாதி தேவர்களை  காத்தவரே  போற்றி 
ஓம்  சிவசக்தி  திருமண  தரிசனம்  கண்டவரே போற்றி 
ஓம்  சித்த வைத்திய  சிகரமே  போற்றி 
ஓம் அகத்திய  பூஜாவிதி  தொகுத்தவரே போற்றி                     64
ஓம்  நான்கு யுகங்களையும்  கடந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழால்  உலகை  ஆண்டவரே  போற்றி 
ஓம்  தமிழ்ச்  சங்கங்களின்   தலைவனே  போற்றி 
ஓம்  சிவசூரிய  வழிபாட்டைத்  துவக்கியவரே  போற்றி
                    

ஓம்  கும்பத்தி லுதித்த  குறுமுனியே  போற்றி 
ஓம்  வடதென் திசையை  சமப்படுத்தியவரே  போற்றி 
ஓம்  உலோபமுத்திரையின்  மணாளா  போற்றி 
ஓம்  அம்பையில்  கோயில்  கொண்டவரே  போற்றி               72

ஓம்  அரும் மருந்துகள்  அறிந்தவரே  போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத்  தெளிந்தவரே  போற்றி 
ஓம்  முக்காலமும்  உணர்ந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழும்  வளர்த்தவரே  போற்றி                                         

ஓம்  ஆஷா சுவாஸினி மைந்தரே  போற்றி 
ஓம்  நெல்மணிகளின்  தலைவனே  போற்றி 
ஓம்  சிவன்  அம்சமே  போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி       80

ஓம்  சர்வ  சக்திகளும்  தருபவரே  போற்றி 
 ஓம் சகல கலைகளும்  சித்தியாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பிறவா வரம்  தரும்   பெருமானே  போற்றி 
ஓம்  தேவி  உபாசகரே  போற்றி                                                              

ஓம்  இசையிலும்  கவிதையிலும் மேன்மை தருபவரே  போற்றி 
ஓம்  கல்வித் தடை  நீக்குபவரே  போற்றி 
ஓம்  புத பகவானின்  தோஷம்  நீக்குபவரே  போற்றி 
ஓம்  முன் தீவினைப்  பாவங்கள்  தீர்ப்பவரே  போற்றி           88

ஓம்  பேரும் புகழும் மதிப்பும் உண்டாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பூர்விக சொத்துக்கள் கிடைக்க  அருள்பவரே  போற்றி 
ஓம்  சகலவித  நோய்களையும்   தீர்ப்பவரே  போற்றி 
ஓம்  குடும்பத்தில்  ஒற்றுமை  நிலவச்  செய்பவரே  போற்றி 

ஓம்  பித்ரு சாபம்  நீக்கி    ஆசி பெற  அருள்பவரே  போற்றி  
ஓம்  சத்ருக்களின்  மனம்  மாற்றி  அன்புரச் செய்பவரே  போற்றி 
ஓம்  சித்திகள்  பெற்று  உயரச்  செய்பவரே  போற்றி 
ஓம்  நல் குருவாகி  மனதார  வாழ்த்து பவரே   போற்றி          96

ஓம்  அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால்  போற்றி 
ஓம்  அகண்டம் பரி பூரணத்தின் அருளே   போற்றி 
ஓம்  மண்டலஞ் சூழ்  இரவிமதி  சுடரே  போற்றி 
ஓம்  மதுரத்   தமிழோதும்   அகத்தீசரே  போற்றி                        100
 ஓம்  எண்திசையும்  புகழும்  என் குருவே  போற்றி
 ஓம் இடைகலையின்  சுழுமுனையின்  கமலம்  போற்றி 
ஓம்  குண்டலியில்  அமர்ந்தருளும்  குகனே  போற்றி 
ஓம்  மேன்மை கொள் சைவநீதி  விளங்க  செய்பவரே  போற்றி
ஓம்  கும்பேஸ்வரன் கோயில் முக்தி  அடைந்தவரே  போற்றி 
ஓம்  குருவாய்  நின்று  இன்றும்  ஆசிகள்  அளிப்பவரே  போற்றி 
ஓம்  குருமுனியின்  திருவடிகள்  எப்போதும்  போற்றி 
ஓம் இன்னல்கள்  நீக்கி இன்பம்  தரும்  அகத்தீசப்  பெருமானே 
உமது  திருவடிகள்  சரணம்  போற்றி.... போற்றியே .....            108 




அகத்தியர் மூல மந்திரம் :
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி  :
ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத

அகத்தியர் மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே 
சாப பாவ விமோட்சனம் 
ரோக அகங்கார துர் விமோட்சனம் 
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் 
சற்குருவே ஓம் அகஸ்திய 
கிரந்த கர்த்தாய நம:
-----

பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
-----
அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்க ....
மந்திரம்:

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

யோகா முத்திரைகள்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.


சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பின

நாகம்மன் மந்திரம்

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம்   ஓம்   ஓம்!!

சக்திவாய்ந்த சக்தி மந்திரம்

ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;
ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;
ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;
ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;
ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;
ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;
ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;
ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;
ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;
ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;
ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;
ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
ஓம் காளி ! ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!

துர்க்கையம்மன் மந்திரம்

ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி 
துர்க்கா தேவி சரணம்!
ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
இந்திரா தேவி மோஹினி சரணம்
மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
கமலாதேவி சரணம் சரணம்
பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!

நந்தி தேவர் போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அறத்தின் உருவே போற்றி
ஓம் அகிலத்தை காப்பாய் போற்றி
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
ஓம் அரியாய் வந்து அமர்ந்தவனே போற்றி
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
ஓம் இடபமே போற்றி
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி
ஓம் ஈகை உடையவனே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உபதேச காரணனே போற்றி
ஓம் ஊக்கமுடையவனே போற்றி
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
ஓம் எங்களுக்கு வரம் தருவாய் போற்றி
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
ஓம் ஐயன்பால் அமர்ந்தவனே போற்றி
ஓம் ஒப்பில்லாத தேவனே போற்றி
ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
ஓம் கல்யாண மங்களமே போற்றி
ஓம் கலைகள் பல தெரிந்தோய் போற்றி
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
ஓம் கஸ்தூரி நிற ஒளி அணிந்தாய் போற்றி
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி
ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
ஓம் கைலாச வாகனனே போற்றி
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
ஓம் பஞ்சாசட்ர ஜபம் செய்பவனே போற்றி
ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவனாய் ஆனாய் போற்றி
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
ஓம் பிரதோஷ காலம் உடையனே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
ஓம் புகழ்கள் பல பெற்றாய் போற்றி
ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூதப்பிரதேச பிசாசுகளை அடக்குவாய் போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
ஓம் மகேஸ்வரன் தூதனே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் மதோன்மத்தன் போற்றி
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
ஓம் மணங்கள் செய் காரணனே போற்றி
ஓம் யந்திர மகிமை உனக்கே போற்றி
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் மதங்கள் மேல் கொடி ஆனாய் போற்றி
ஓம் லட்சியமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
ஓம் தண்டங்களின் மேல் அறிந்தாய் போற்றி
ஓம் தயாபரம் அருள் பெற்றவனே போற்றி
ஓம் தஞ்சமென்றவர்களுக்கு அருள்செய்வாய் போற்றி
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
ஓம் நாகநந்தனின் நயனம் தெரிந்தவனே போற்றி
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
ஓம் பார் எல்லாம் உன்புகழ் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி
ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் ஆதார சக்திமயம் பெற்றாய் போற்றி
ஓம் சிவனின் வாகனமானாய் போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
ஓம் நீலாயதாட்சி அருள் நின்றாய் போற்றி
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி
ஓம் வித்யா காரணனே போற்றி
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
ஓம் வேல் உடையவனே போற்றி
ஓம் மகா காணனே போற்றி
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி
ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
ஓம் உன் மகிமை உலகமெல்லாம் போற்றி
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
ஓம் ஊடலுடக்குதவியவனே போற்றி
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
ஓம் மாயை ஒடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
ஓம் மாமன்னரும் உன் பணி செய்வாய் போற்றி
ஓம் மகதேவன் கருணையே போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி

கணபதி வசிய மந்திரம் - அகத்தியர்

நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.

ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
                                     
                                                அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
வசியம் முதல் மாரணம் வரையிலான எட்டுவகை கர்மங்களையும் சித்திசெய்வதற்க்கு ஒரு வழி சொல்கிறேன் கேள்,
அது என்னவென்றால் அது கணபதியின் தியானமாகும். அதை செய்யும் முறை யாதனில் முதலில் ஒரு செப்புத்தகட்டில் ஒரு வட்டம் போட்டு அதனுள் ஓம் என்று எழுதி அந்த ஓம் என்பதற்க்குள் ஸ்ரீ என்று எழுதவும். இந்த சக்கரத்தை கணபதியின் முன்னே வைத்து பூசை பொருட்களும் வைத்து முறையாக பூசை செய்து பின்பு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவ நடுமையத்தில் மனதை நாட்டி "ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீகுரு கணபதி சுவாகா" என்ற மந்திரத்தை பதினாறு உரு செபித்தால்  கணபதி ஒளி வடிவில் உனக்கு காட்சி தந்து உனக்கு வசியமாவார். அப்படி கணபதியை வசியம் செய்தவர்கள் அஷ்டகர்மயோகம் செய்தால் அது அவருக்கு சித்தியாகும். மேலும் அறுபத்து நான்கு சித்துக்களும் செய்யும் வல்லமை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம் என்பது வாலை தியானம்

காயத்திரி என்பது பல தேவதைகளுக்கும ஜெபிக்க படும் மந்திரங்களாகும் . இவற்றுள் முதன்மையானதும் அனைவராலும் அறியப்பட்டதும் , பிரம்ம ரிஷி ( சித்தர்களின் மிக உயர்நிலை ) விசுவாமித்திரர் அருளிய சூரிய காயத்திரியாகும் . ஆனால் இந்த மந்திரத்தில் சூரியன் என்ற வார்த்தை எங்கும் இல்லை . காயத்திரி என்ற வார்த்தை எங்கும் இல்லை . இந்த மந்திரத்தை ஆழமாக பார்ப்போம் .


காயத்திரி மந்திரம்

ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: பரசோதயாத்



இந்த சம்ஸ்கிருதத ஸ்லோகத்திற்கு தமிழ் பொருள் 

ஓம் என்ற பிரனவமாகவும் , பூர் புவ ஸுவ என்ற வியகிருதி யாகவும்(அகார, உகார மகார சக்தி வடிவாகவும் ), இருக்கின்ற யார் நம்முடைய புத்தியை தூண்டுகிறாரோ, அனைததுமாய் இருப்பவரான அந்த இறைவனின் சிறந்த ஒளிவடிவை தியானிப்போம்.

விளக்கம்

ஓ என்ற புள்ளியாகிய இறைவன் ஓம் என்ற பிரணவமாக பெரு வெடிப்பானான் . இந்த பிரணவம் அகார உகார மகார என்ற சக்தியாக விரிவானது . இந்த ஓங்காரம் விரிவடைந்து அகார உகார , மகர நாத விந்து சக்தியானது . . இது பஞ்ச வித்தாக , பஞ்ச பூதமாக விரிவானது . பஞ்ச பூதங்கள் நால்வகை யோனி எழுவகை பிறப்பாக இப்பிர பஞ்சமாக விரிவானது . இந்த பஞ்சபூத இறை சக்தி நமது புத்தியை செயல் படவைக்கிறது. இந்த இறை சக்தி பல வடிவாக இந்த பிரபஞ்சதில் உள்ளது அவற்றுள் மிக சிறந்த வடிவான ஒளி வடிவத்தில் இறைவனை தியானிப்போம் . இந்த விளக்கத்தில் காயத்திரியும் இல்லை சூரியனும் இல்லை.

வேதாந்த விளக்கம் : காயத்திரி வந்தவிதம் .
இந்தமந்திரம் இறைவன் பிரபஞ்சமாக உருவெடுத்ததர்க்கு முன் “பூர் புவ ஸுவ “ என்ற சக்தி வடிவாக இருந்தான் என்கிறது. அதுவே வியாகிருது. அந்த சக்தி வடிவிற்கு ஆதி சக்தியாக தெய்வமாக வேதாந்திகள் உருவகப்படுத்தினர் . இந்த ஆதி சக்தி,சிவன் விஷ்ணு , பிரம்மா ஆகியவர்களுக்கு சக்தி வழங்கியது . அதனால் இவர்கள் அழித்தல் , காத்தல்,படைத்தல் ஆகிய தொழில் செய்கின்றனர் . இதனால் பிரபஞ்சம இயங்குகிறது . இந்த ஆதி சக்தி= சவிது அல்லது சவிதா = காயத்திரி என்று பெயர் பெற்றது . . இந்த காயத்திரி பிரபஞ்சமாக விரிந்தது . ஒளி வடிவானது . இறைவன் காயத்ரி என்ற சக்தியாக இறைவனின் பல வடிவுகளில் சிறந்த ஒளிவடிவில் இருக்கிறான், இறைவனை ஒளிவடிவில் தியானிப்போம் .. இறைவனை ஒளிவடிவில் தியானிக்க இந்த மந்திரம் சொல்கிறது . நமக்கு பிரகாசமான ஒளியை தருவது சூரியன் என்று கருதி இதை சூரிய காயத்திரி என்று அழைகிறார்கள் . இதன் பொருள் புரியாதவர்கள் காயத்திரி என்பது சூரிய தியானம் என்று பொருள் செய்கிறார்கள்.

இம் மந்திரத்தில் சித்தர்களின் வாலை வந்தவிதம் .

போகர் ஜனனசகரம் என்ற நூலில் பாடல் 7 லில் பிரபஞ்சத்தில் இறைவன் வாலையாக பரஞ்சோதியாக . இருப்பதாக சொல்கிறார்.

உறைகிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா
ஒருவனுமே வல்லவட பரமமப்பிரமம்


போகர் ஜனனசாகரம் பாடல் 3

சிருஷ்டித்த கலையதுதா நெத்தனையோ சொல்லும்
திரண்டதொரு விபரமது தெரிய சொல்லும் .
மட்டித கலை யதுதான் னைமூன்றப்பா
வதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே
வட்டித்த கலையதுதான் வாலையாகி
வந்ததட முகம் ஐந்து கையும் பத்தாய்
எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா
ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே 

போகர் ஜனனசாகரம் பாடல் 7


பொருள் விளக்கம்

ஆதியில் ஆதி சித்தன் என்ற இறைவன் ( ஒ=ஓம் ) ஒருவன் உண்டு. அவன் பர பிரமம் . அவன் ஓம் என்ற பிரணவமாக சக்தியை படைதான்( சக்தி=சவிது = காயத்திரி = வாலை) அதன் சக்தி மூவைந்து (“பூ புவ ஸுவ) கலை அளவு . இந்த சக்தி என்ற கலைதான் வாலை. இந்த வாலை ஐந்து முகமாக பஞ்சபூதமாகவும் பத்து கைகள் என்ற தச வாயுக்களாகவும் இருக்கிறது . இந்த வாலை தான் எனக்கும் உனக்கும் மூலமான பரஞ் ஜோதி ஆகிய இறைவன்.

பர பிரம்மம் என்ற ஆதி சித்தன், சக்திவடிவில் வாலை என்ற ஒளியாக பரஞ்ஜோதி யாக உள்ளான் . இந்த வாலை , பஞ்சபூதமாக இப்பிரபஞ்சமாக உருவானது . . ஆக இறைவன் வாலை என்ற ஒளிவடிவாக பிரபஞ்சவெளியில் இருக்கிறான் . அதாவது பிரபஞ்சம உருவாவதில் இறைவனின் முதல் நிலை சக்தி =சவிது=காயத்திரி = வாலை = ஒளி.

இந்த இறைவனை மௌன யோகத்தில் ( உயர்நிலை வாசி யோகம் ) பர வெளியில் காணலாம் .
இது பிரபஞ்சவாலை இதை சித்தர்கள் உண்மனிதாய் என்பார்கள் . பரவெளியில் இறைவனை ஒளிவடிவில் காண்பது ஒருவகை முக்தி .

எனவே காயத்திரி மந்திரம், இறைவனை வாலை தியானம் என்ற ஒளிவடிவில் தியானம் செய்ய சொல்கிறது . இது சித்தர்கள் கோட்பாடு . விசுவாமித்திர சித்தனால் சொல்லப்பட்டது .

இந்த பிரபஞ்ச வலை மனிதனுக்கு உள்ளே ஒளியாக , இறைவனாக உள்ளாது . இதை வாலை பெண் என்றும மனோன்மனிதாய் என்றும் சித்தர்கள் பரிபாசையாக சொல்லுவார்கள் . இதை பூரணம் என்றும் சொல்லுவார்கள் சித்தர்கள் வணங்குவது அல்லது தியானிப்பது நம்முள் ஒளிவடிவில் இருக்கும் இறைவன் . .வாசி யோகத்தில் நம்முள் வாலை என்ற ஒளிவடிவில்இருக்கும் இறைவனை தியானிப்போம் காண்போம் . இதுவும் முக்க்தியில் ஒருவகை.

Sunday, July 24, 2016

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்

சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன
வாழ்விடங்களில் இருந்து விலகி
காடுகளிலும், மலைகளிலும்
வாழ்ந்திருந்தனர்.அவர்களின் வாழ்நாள் தேடல்
விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம்
சார்ந்ததாகவே இருந்தது. இத்தகைய தேடலில்
அவர்கள் அடைந்த தெளிவும், முதிர்வும்
அசாதாரணமானவை.

தாங்கள் உணர்ந்த அரிய தகவல்கள்
சுயநலவாதிகளிடமோ அல்லது
பேராசைக்காரர்களிடமோ சென்று சேர்ந்து
விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக
இருந்தனர்.அதன் பொருட்டே தங்களின்
பாடல்களை மறைபொருளாய் எழுதி
வைத்தனர்.

சித்தரியலில் குருவே எல்லாவற்றுக்கும்
ஆதாரமானவர் என தீர்க்கமாய்
நம்பினர்.குருவானவர் தனத் தெளிவுகளை
சீடர்களுக்கே அளித்தார்.மறைபொருளை
கட்டவிழ்க்கும் வகையினையும்
குருவிடமிருந்தே சீடர்கள்
பெற்றனர்.இதனையே நாம் குருவருள்
என்கிறோம்.

சதாரண மனிதர்களினால் செயல்
படுத்தமுடியாத நுட்பங்கள், வழிமுறைகள்
அவற்றின் அசாத்திய விளைவுகளை பற்றிய
தகவல்களே இப்படி பாதுகாக்கப்
பட்டது.இவற்றையே பொது மக்கள் சித்த
ரகசியம் என்று அழைத்தனர்.
என்னுடைய புரிதலின்படி இந்த சித்த
ரகசியங்களை ஆறு வகைகளாய் தொகுக்க
நினைக்கிறேன்.

அவையாவன...
உடல் கட்டு மந்திரங்கள்
அபாயகரமான யந்திரங்கள்
சாபநிவர்த்தி மந்திரங்கள்
காயகற்ப வகைகள்
இரசவாதம்
தீட்சைகள்
இரசவாதம் பற்றி முன்பே பல பதிவுகளில்
பார்த்து விட்டபடியால் மற்ற வகைகளைப்
பற்றிய எனது புரிதல்கள் மற்றும்
தகவல்களை வரும் நாட்களில் பகிர்ந்து
கொள்கிறேன்.

இனி பகிர இருக்கும் பல தகவல்கள் நம்ப
இயலாத வகையிலும், பகுத்தறிவுக்கு
ஒவ்வாதனவாகவும் இருக்கலாம்.இவற்றின்
சாத்திய,அசாத்தியங்கள் ஆய்வுக்கும்,
விவாதத்திற்கும் உட்பட்டவை. இந்த
முறைகளை செயல்படுத்தி பலன் காண்பதில
நிறையவே நடைமுறை சிக்கல்கள்
இருக்கின்றன.முறையான குருவின் அருளாசி
மற்றும் வழி நடத்துதல் இருந்தால் மட்டுமே
இவை சாத்தியமாகும்.எனவே இவற்றை ஒரு
தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட
வேண்டுகிறேன்.

சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”
-------------------------------------------------------------
நமது உடலானது பஞ்ச பூதங்களின்
சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச
சக்திகளான கோள்கள், அட்டதிக்கு
பாலகர்களுக்கு
கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான
மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின்
ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த
கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே
எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும்,
சுயமாகவும் செயல்பட முடியும் என
சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும்
தெளிவுகளுமே இந்த பதிவு...

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து
உடலை வெளியேற்றுவது, வெளியேறிய
பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு
அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு
மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல்
கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது
அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர்
மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக
குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும்
என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும்,
அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும்
கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு
மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு
மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த
பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க
வேண்டும் என அகத்தியர் கூறுகிறார்.

அதாவது...
"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"
- அகத்தியர் -

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்
ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது

அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

திக்கு கட்டு
-------------------
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே

உடல்கட்டு.
-------------------
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்...........

சிவ மகாமந்திரம் ... முயன்று பாருங்கள்
--------------------------------------------------------------------
"ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்"
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.
இதை நீக்க சிவ மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம் - அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .
"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

அனுமாரின் வசியக் கட்டு மந்திரம் ...
----------------------------------------------------------
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,
லங்காபுரி ராவண சம்ஹாரா,
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார்அகத்தியர்.

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ...
------------------------------------------------
"ஓம் பஹவதி ப்ய்ரவி
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன்.

சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..
---------------------------------------------------------
"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்"
என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
---------------------------------------------------------
"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்"
என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..
------------------------------------------------------------
"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"
- அகத்தியர் -

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம்
றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால்
செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..
-------------------------------------------------------
"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"
- அகத்தியர் -

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு
சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம்
உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..
--------------------------------------------------------
"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும்
மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று
அன்பாக லட்சம் உரு செபித்தால்
குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
--------------------------------------------------------------
"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே"
- அகத்தியர் -

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு
செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகத்தியர்.

சனிக்கான உடல் கட்டு மந்திரம்..
----------------------------------------------------
"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"
- அகத்தியர் -

பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு
செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
----------------------------------------------------
"திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"
- அகத்தியர் -

திறமான இராகு பகவானின் உடல் கட்டு
மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி"
என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால்
இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
------------------------------------------------------
"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம்
போடே"
- அகத்தியர் -

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு
செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகதியர்.

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின்
மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல்
கட்டு மந்திரங்களை அகத்தியர்
அருளியிருக்கிறார்.

குளிகன் உடல் கட்டு மந்திரம்..
----------------------------------------------
"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"
- அகத்தியர் -

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு
"ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு
செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.
-------------------------------------------------------------
"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங்
என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"
- அகத்தியர் -

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம்
புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங்
வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம்
பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது
லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே
அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும்
என்கிறார்.

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால்
உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப்
பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ
கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும்
அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது
உடல் முழுமையாக உனது
கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.

உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை
----------------------------------------------------------------
சித்தர்களின் மந்திரங்கள் மிகவும்
நுட்பமானவை. அவர்தம் பாடல்களில்
மந்திரங்கள் மட்டுமே கூறப்
பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை
செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு
கொண்டு வருவது போன்றவைகள்
குருவினால் மட்டுமே கூறிட இயலும்.
தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை
வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.
இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும்
முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை
இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு
பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம்
மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி
பார்ப்போம்.

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும்
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்
திருவான வினாயகரின் சுழியை முந்திச்
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே"
- அகத்தியர் -

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்"
என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம்
முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம்
என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும்,
சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே
அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர்,
மேலும் திருவான வினாயகரின் சுழியை
முதலில் செபித்தே தனது மந்திரங்கள்
அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று
சொல்கிறார்.

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு
வடக்குமுகம் இருந்துலட்சம்
உருத்தான்போடு"
- அகத்தியர் -

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு
உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து
ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு
நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க
வேண்டும் என்கிறார்.

இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய
தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும்,
முயற்சியும் உள்ள எவரும் குருவருளை
வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன்
படுத்திடலாம்.

பின் குறிப்பு :
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள்
அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட
நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத
நம்பிக்கைகளை விதைப்பதோ எனது
நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை,
பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும்,
விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும்
தெளிவுகள் கிடைக்கலாம்.

சிவ சிவ சிவ சிவ நமசிவாய.................

முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.

காளி உபாசனை மந்திரம்

காளி செபத்தை மனத்தினால் தியானித்து,
"ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"
இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 1008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கப்படாது,ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும்.இந்தப்படி சுத்தாமயிருந்து ஜெபிக்கச் சித்தியாகும்.
இதனால் கவி பாடத் திறமையுண்டாகும்,எதிரிகள் சத்துருக்கள் இருக்க மாட்டார்கள்,பேய் பிசாசு யாவும் உபதேசித்தவர் பெயர் சொன்னாலே ஓடிவிடும்.தொழில் வியாபாரம்,உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
காளி யந்திரம் வைத்து உபாசனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்

பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்

கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக

ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்

மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்

திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்

ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்

மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்

பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்

உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி

ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்

சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்

விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்

அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்

கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்

மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி

உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்

சதயம். ... ராகு. ... ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்

பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

உத்திராட்டாதி ... சனி. ... கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்


சில மந்திரங்கள்

காயத்ரி மந்திரங்கள்

குபேரன்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

ஸ்ரீராமர்

ஓம் தாசரதாய விதமஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ ப்ரசோதயாத்

ஸ்ரீசீதா

ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே
பூமிஜாயை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

மகாவிஷ்ணு

ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

அய்யப்பன்(சாஸ்தா)

ஓம் பூதநாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆதிசேஷன்

ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர்

ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீகருடன்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸீவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

ஸ்ரீசரபேஸ்வரர்

ஓம் ஸாலுவே சாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

ஸ்ரீ வாராஹ

ஓம் தனுர்தராய வித்மஹே
வக்ரதம்ஸ்ட்ராய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்

ஸ்ரீஅன்னபூரணி

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

ஷிரிடி சாய் பாபா காயத்ரி

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்நோ சாய் ப்ரசோதயாத்


ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!


ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹ
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்

ஓம் வாக் தேவ்யைச வித்மஹே காம பீஜாயை
தீமஹி தந்தோ தேவி ப்ரசோதயாத்.

ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸரூடாய வித்மஹே
கூர்சஹஸ்தாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
சதுர்முகாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராராத்யாய வித்மஹே
வேதாத்மனாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் வேதாத்மனேச வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் பரமேஸ்வராய வித்மஹே
பரதத்வாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

பித்ரு தோஷம் நீங்க ஒரு பரிகார முறை

ஞாயிற்றுக்கிழமை வரும் உத்திராடம் நட்சத்திரம் அன்று ராமேஸ்வரம் சென்று,கடல் தீர்த்தத்திலும்,காயத்ரி தீர்த்தக்கட்டங்களிலும் நீராடிவிட்டு,ராமநாதசுவாமியையும், அம்பிகையையும்வழிபடவேண்டும்.

பிறகு,கோவிலுக்கு வடக்கேயுள்ள கந்தமாதனப் பர்வதத்திலுள்ள ராமபிரான் பாதத்தை துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதன்பிறகு,உடுமலைப்பேட்டையிலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திரு மூர்த்தி மலைக்குச் சென்று மலையடிவாரத்தில் இருக்கும் பஞ்சலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ

...

காகத்தின் மீதினில் கருணையாய் வருபவர்
சோகமே தீர்த்து சுகமது தருபவர்
மோகமும் மூடமும் மோசமும் தீர்ப்பவர்
வேதனே மந்தனே வேண்டினேன் போற்றியே

இந்த மந்திரத்தை உபதேசித்தவர் ஸ்ரீலஸ்ரீதுர்க்கை சித்தர் சுவாமிகள்.

...

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்!
-----
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!”
-----
ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!
-----
“ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி!”

...

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா
திருநீல கண்டம்!

...

ஓம் ஸ்ரீம் வஸீதே வஸீதாரே வஸீகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

செல்வ வளம் தரும் மந்திரங்கள்

அ) லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!
ஹிருதயாதி ந்யாஸ!நிக்விமோக!
இதை ஜபித்துவந்தால் தன அபிவிருத்தி ஏற்படும்.

ஆ) ருண ஹரண கணபதி (கடன் தீர்க்கும் கணபதி)

ஓம் கணேச ருணம் சித்தி வரேண்யம் உறம்நமபட்
ஹிருதயாதி ந்யாஸ திக்விமோக(ஆறுதடவைக்கு குறையாமல்/ஒவ்வொரு முறையும்)

இ) ஐஸ்வர்ய லட்சுமி போற்றி

நமவசிய அஷ்ட லட்சுமி மகிழ்ந்தே
நன்மை எல்லாம் தர வேண்டினேன் புகழ்ந்தே
அமரர் தொழும் லட்சுமி உன்னையே நினைத்தேன்
அன்பினால் மருவியே அனுதினமும் பணிந்தேன்

அருள் புரிவாயே அன்னை லெட்சுமியே
அகால இருந்தே ஐஸ்வர்யம் தந்தே

ஓம் சர்வ சர நமச்சிவய நம
---

சித்தர்களின் மூல மந்திரங்க்ள் & உத்திகள்

சித்தர்களின் மூல மந்திரங்க்ள்

நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"


அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”


திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"


போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"


கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"


தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"


சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"


புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"


பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"


காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"


இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"


சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"


அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"


கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"


சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"


உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"


குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"


கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

...

சித்தர்களின் உத்திகள் ஆறு ...

1) உயிரின் - உடலின் தன்மைகளையும் இயல்புகளையும் அனுபவ மொழிகளின் மூலம் உருவாக உத்தி மூலமும் எடுத்து சொல்வது.

2) வரைமுறைகளைச் சொல்லி, கதைகளைச் சொல்லி, அதன் உருவக தத்துவங்களைப் பூட்டை திறப்பது போல் திறந்து காட்டுவது. பரம்பொருளின் பேராற்றல், அதனோடு அண்டமும்,பிண்டமும் எப்படி இணைந்திருக்கின்றன என்றும், இயற்கை இயல்புகளை இறையுணர்வு கலந்து விளக்கும் உத்தி.

3) மனம், உயிர் பற்றி விளக்கி மனிதம், விலங்கு வேறுபாடுகள் கூறி, உள்ளத்துக்குள்ளே நிகழ்த்த வேண்டிய தவ ஒழுக்கங்களை பற்பல யோக விளக்கங்கள் மூலம் கூறும் உத்தி.

4) மந்திரங்களைப் பற்றியது. மந்திரங்களுக்குரிய சொற்களும், ஒலிகளும் பற்றி எத்தனையோ நூறாண்டுகளில் பயின்றுபயின்று சித்தர்கள் கண்டுபிடித்த ரகசியங்களாகும். மந்திரங்களை எப்படி யந்திரங்களில் அடைப்பது என்ற உத்தி. ஒலி மாறுபாடுகளால் மனித மனத்திற்கு எப்படி நன்மை, தீமைகள் மற்றும் சொற்கள் மூலம் ஒலிகளை இயக்கி தியான முறைகளைக் கூறி மனித மனத்தை உயர்த்தி மன ஆற்றல்களை உயிர்பிப்பது.

5) சரியை - தொண்டு நெறி, தாச மார்க்கம்; கிரியை - மகன் தந்தையினை வழிபடுவது சத்புத்திர மார்க்கம்; யோகம் - சக மார்க்கம் தோழமை இறைவனை நண்பனாக கருதுதல்; ஞானம் - இம்மூன்றையும் கடந்த பேரின்பச் செவ்வழி.

6) ஆன்ம நிலை. சித்தர்களின் ரகஸ்யம். அன்மாக்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப (ஜீவாத்மா) இறைவனே ஆசிரியனாக வந்து அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்கிறான்.

அகத்தீசர்

அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமசெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார்.

அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பதை உணரமுடியுமேயன்றி இன்னதென்று சொல்லமுடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறியமுடியாதவொரு இரகசியம் ஆகும்.

நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்று நாம ஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான இரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.

...

அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.

- மகான் காகபுஜண்டர்

...

அகத்தீசா என்றால் அனைத்தும் பெறலாம்

அன்பு பொருந்திய வாழ்விற்கு அகத்தீசா என்று கூறுங்கள்.
ஆக்கம் பெற்று வாழ அகத்தீசா என்று கூறுங்கள்.
இல்லறம் சிறக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஈகை குணம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
உண்மைப் பொருள் அறிய அகத்தீசா என்று கூறுங்கள்.
ஊக்கம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
எண்ணம் சித்திக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஏற்றம் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஐயம் நீங்கிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஒண்பொருள் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஓங்காரம் கண்டிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஔடதம் அறிந்திட அகத்தீசா என்று கூறுங்கள்.

ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!

ஓம் சிவாய அகத்தீசாய நம:

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.

...

குருவணக்கம்

குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு.

குருவடி சரணம், திருவடி சரணம். குருவருளே திருவருள்.

அகத்தியர் அருளிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பஞ்சரத்ன ஸ்தோத்ரம்

அறியாமை வடிவாகிய பூதத்தின் மீது நிருத்தரூபமாக ஒரு பாதக் கமலத்தை வைத்திருப்பவராகவும்,
அடியார்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவதில் நிபுணராகவும்,
தாமரை யொத்த கண்களை யுடையவராகவும்,
போக மோக்ஷங்கள் அளிப்பவராகவும்,
பூலோகத்தில் பிரம்மன், விஷ்ணு முதலியோர்களால் பூஜிக்கப்பட்டவராகவும்,
அடியேனுக்கு எல்லா சித்திகளையும் அருளிச் செய்பவராகவும் இருக்கும்
தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

குபேரன், தீவிர தபஸ்விகள், மோக்ஷத்தை விரும்புபவர்கள், மேலும் மன
உறுதிபெற்ற முனிவர்கள் இவர்களால் பூஜிக்கப்படுபவரும், தன்னையடைந்த
யோகிகளுக்கு முக்தியை அளிப்பவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

வீரபத்ரர் முதலிய சுணங்களால் தக்ஷனுடை யாகத்தை அழித்தவரும், இயக்கர்,
அரக்கர், மானுடர், கின்னரர், தேவர்கள், நாகர்கள், சமுத்திரர்கள், விநாயகர்
முதலியோர்களால் வணங்கப்படுபவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

சந்திரப்பிறை சூடியவரும், மலைமகளின் மார்பகத்தில் பூசப்பட்ட சந்தனம்,
குங்குமம் இவற்றால் அடையாளமிடப்பட்ட நிர்மலமான சரீரத்தையுடையவரும்,
சக்தியோடுகூடி ஸ்ருஷ்டியைச் செய்யும் காலத்து சகலராகவும் இருக்கிற
தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

செந்தாமரையொத்த பாதத்தில்
நன்மணிகளாலான சதங்கை யணிபவரும், முப்புரங்களையழித்தவரும், இமயமலையில்
கைலாசத்தில் சுகமாக வீற்றிருப்பவரும், ப்ருது என்ற அரசனுக்கு
அருள்செய்தவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

ஹே மஹேஸ்வரா!

சங்கரா! விஸ்வநாயகா! நிலைபேறானவரே! இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை தினமும்
காலையில் எவர் துதிக்கின்றாரோ அவருக்கு எல்லா பாபங்களும் அழிந்து,
புத்திரன், மனைவி, நண்பர், செல்வம் யாவும் உம்முடைய கருணையால்
உண்டாகட்டும்.

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்

51 விநாயகர் வடிவங்களும்  
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும் 


1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2.
மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3.
த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4.
லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5.
ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6.
மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7.
ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8.
வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9.
நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10.
புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11.
பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12.
சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13.
சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14.
க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15.
குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16.
ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17.
ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18.
ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19.
விஜய கணபதி: வெற்றி.
20.
அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21.
ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22.
உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23.
போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24.
விரிவிரி கணபதி: விசால புத்தி.
25.
வீரகணபதி- தைரியம்
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27.
கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28.
விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29.
குமார கணபதி: மாலா மந்திரம்.
30.
ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31.
ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32.
தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33.
துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34.
யோக கணபதி: தியானம்.
35.
நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36.
ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37.
புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38.
நவநீத கணபதி: மனோவசியம்.
39.
மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40.
மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41.
மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42.
குரு கணபதி: குருவருள்.
43.
வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44.
சிவாவதார கணபதி: சிவபக்தி.
45.
துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46.
ரக்த கணபதி: வசிய விருத்தி.
47.
அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48.
ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50.
மகா கணபதி: ப்ரணவமூலம்.
51.
வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை