Friday, July 4, 2014

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய


முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில்
கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்.

Android மொபைளுக்கான Avast antivirus மென்பொருள் வெளியாகியுள்ளது

Android மொபைளுக்கான Avast antivirus மென்பொருள் வெளியாகியுள்ளது


avast! Free Mobile Securityகணினிகளில் பலர் உபயோகப் படுத்தும் இலவச Antivirus மென்பொருள்களில் Avast 'ம் ஒன்று.  அதன் அடிப்படையில் Avast anti virus அடுத்தபடியாக மொபைல் இயங்குதளங்களில் தற்போது முதல் இடத்தில் உள்ள Android மொபைலுக்கான Antivirus மென்பொருளை வெளியிட்டுள்ளது.
                                                      இதற்க்கான Screen Shots :

  
                                                          இதற்க்கான Download link

போட்டோஷாப்பில் 21-நகை போட்டு அழகு பார்க்க

altகுழந்தைகளுக்கு தங்கம் போட்டு அழகுபார்க்க வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 100 சவரன் தங்க நகை களை தரலாம் என்று உள்ளேன்.
20 செட் தங்க நகைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள். நான் கீழே சசிகுமார்-அனன்யா அவர்களின் படத்தை தேர்வு செய்துள்ளேன் alt




நெக்லஸ் மாடலில உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் படத்தில் அந்த நகையை இழுத்துவந்து விடுங்கள். பின்னர் Ctrl+T மூலம் நகையை தேவையான அளவு மாற்றி குறைத்துக்கொள்ளுங்கள்.கழுத்தில தேவையான இடத்தில் மூவ் டூல் மூலம் நகர்த்தி வைத்துவிடுங்கள்.நான் இவ்வாறு நகை டிசைன் செய்தபின் வந்துள்ள புகைப்படம் கீழே- alt



நமது வாசகர்களுக்கு ஏற்கனவே PSD பைலை எப்படி பயன்படுத்துவது என்று போட்டோஷாப் பாடத்தில் பதிவிட்டுள்ளேன். முந்தைய பாடததை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவினை பாருங்கள். கருததினை கூறுங்கள்.

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு

altநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

கணணியில் உங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு

altஎந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் அடங்கிய கோப்பறைகளை மறைக்கலாம்.

இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.

Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும். அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய கோப்பறை உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும்.

E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள்.

இப்போது D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் attrib +h +s foldername என தட்டச்சு செய்யுங்கள்.

உதாரணத்திற்கு D:/>attrib +h +s foldername.

இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறையின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு கோப்பறையின் பெயர் songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள். D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறை காணாமல் போய் இருக்கும்.

மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் – குறி இட்டால் போதும்.

அதாவது D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த கோப்பறை உடனே கண்ணுக்குத் தெரியும்.

பல்வேறுபட்ட ஓடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு

altஓடியோ கோப்புகள் பல்வேறான போர்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A மற்றும் OGG எனப் பல போர்மட்டுகளில் இவை உள்ளன.

இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கணணிகளில் இயக்க முடியும். பெரும்பாலான ஓடியோ இயக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் இயக்குவதில்லை.
எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன் விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஓடியோ போர்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.

இந்த இலவச ஓடியோ மாற்றம் செய்யும் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி. மேலே குறிப்பிட்ட அனைத்து போர்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு நமக்குத் தேவையான போர்மட்டில் மாற்றித் தருகிறது.

இதே போல பல வீடியோ போர்மட் கோப்புகளில் இருந்து ஓடியோவினை மட்டும் பிரித்தெடுத்து நாம் குறிப்பிடும் கோப்பு போர்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG போர்மட் கோப்புகளில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

போர்மட் மாற்றிய ஓடியோ கோப்புகளை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும் அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான போர்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஓடியோ கோப்புகளை இணைக்கலாம்.

தரவிறக்க சுட்டி

Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்

altபோட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:
•இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
•முற்றிலும் இலவசமான மென்பொருள்.
•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய  http://sourceforge.net/projects/gimp-win/

இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -http://sourceforge.net/projects/gimp-win/files/GIMP%20Help%202/GIMP%20Help%202.6.0%20%28updated%20installer%29/gimp-help-2-2.6.0-en-setup.exe/download

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?


altநீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
 கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும் 
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம் 
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும் 
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் 
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்



3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும் 

உதவி துளிகள்

உதவி துளிகள்

1 கிரவுண்டு = 2400 சதுர அடி
1 செண்ட் = 435.60 சதுர அடிகள்
100 செண்ட் 1 ‌ஏக்கர்

100 ஆயிரம் = 1 லட்சம்
10 லட்சம் = 1 மில்லியன்
100 லட்சம் = 1 கோடி
100 கோடி = 1 பில்லியன்
100 பில்லியன் = 1 டிரிலியன்
100 டிரில்லியன் = 1 ஜில்லியன்

2014 சிறந்த இலவச ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்

கடவுள்முறை( GOD MODE ) Win7

விண்டோஸ் 7 டிப்ஸ்


விண்டோஸ் 7 ல் கீழ்காணும் பெயரில் போல்டர் புதியதாக உருவாக்கினால் , அது உங்களை கடவுள்முறைக்கு( GOD MODE ) எடுத்துச்செல்லும்.. அதில் அனைத்து விண்டோஸ் அமைப்புகள்(Settings) அனைத்தும் காட்டப்படும். உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்..அதாவது கிட்டதட்ட Control Panelல் வரும் அனைத்து அமைப்புகளும் ஒரே இடத்தில் காட்டப்படும்..

இன்டர்நெட் இன்பர்மேசன் சர்விஸ்

இன்டர்நெட் இன்பர்மேசன் சர்விஸ் ( IIS ) @ Win 7

இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தே .ASP , .AXD, .SOAP, ASPX, .SHTML, .STM, .AXD, .ASMX, .PHP போன்ற பைல்களை சோதனை செய்து கொள்ளலாம்..

வெப் டிசைன்(web design) செய்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.. இதனை Windows 7 ல் இன்ஸ்டால் செய்ய பின்வரும் லிங்கை கிளிக் செய்து அதில் கூறிய படி செய்யவும்..

லிங்க்..
http://www.iis.net/learn/install/installing-iis-7/installing-iis-on-windows-vista-and-windows-7

திரை கீ போர்ட்( On-Screen Keyboard )

திரை கீ போர்ட்( On-Screen Keyboard )

எப்பொழுதாவது உங்கள் கீ போர்டை உடனடியாக உபயோகிக்க முடியாமல் போனால் வின்டோஸ்ல் உள்ளமைந்துள்ள(inbuilt) திரை  கீ போர்டை( On-Screen Keyboard ) மவுஸ் வழியாக உபயோகிக்கலாம்..அதனை கொண்டு வர வழிமுறைகள் இங்கே..ரன் மெனுவில் 'osk' என டைப் செய்து என்ட்டரை(enter) தட்டவும்..உடனே மவுஸ் வழி இயங்கும் கீ போர்டானது தோன்றும்..இதை உபயோகித்து டைப் செய்து கொள்ளலாம்.