Sunday, October 18, 2015

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

தலைவலி அன்றாடம் எல்லோருக்கும் வரும் பிரச்சனை தான் பாட்டி வைத்தியம்  என்றவுடனே அது நமக்கு சரிப்பட்டு வராது என்று நினைப்பவர்களுக்காக தான்  20 விதமான வைத்தியங்களை தொகுத்து தந்துள்ளேன் நிட்சயமாக இதில் ஒன்றையாவது உங்களால் இலகுவாக செய்து விட முடியும்  நிட்டயமாக  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இது உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள நண்பர்களுக்கும் தெரிவித்து பயனடைய முடியும்


கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.


தேவையான பொருட்கள்:

    கற்பூரவல்லி இலைச்சாறு.
    நல்லெண்ணெய்.
    சர்க்கரை.


செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

அல்லது 


மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    மகிழம்பூ
    சுக்கு.
    சீரகம்.
    சோம்பு.
    ரோஜாப்பூ.
    ஏலக்காய்.
    அதிமதுரம்.
    சித்தரத்தை
    தேன்.


செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

அல்லது 

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:
    வேப்பம் பட்டை.
    கடுக்காய்
    கோரைக் கிழங்கு.
    நிலவேம்பு.
    தேன்.


செய்முறை:
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது 
செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

அறிகுறிகள்:

    சூட்டினால் ஏற்படும் தலைவலி.
    உடல் சூடாக இருத்தல்.

தேவையான பொருட்கள்:

    செண்பக இலை.
    நெய்.
    ஓமம்.


செய்முறை:
செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவ வேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.


அல்லது



தலைவலி தைலம் தயாரித்து பயன்படுத்தல்

தேவையான பொருட்கள்:

    மிளகாய்- 200 கிராம்
    மிளகு – 100 கிராம்
    பால் – 1/2 லிட்டர்
    நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்


செய்முறை:
 மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:
வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.

தீரும் நோய்கள்:

    எவ்விதமான தலைவலியும் குறையும்.


அல்லது


வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    வெற்றிலை.
    கிராம்பு.

செய்முறை:
வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.


அல்லது 

கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச்சாறு ஆகியவற்றை சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.

அறிகுறிகள்:

    தலை வலி.
    மூக்கில் நீர் வடிதல்.
    ஜலதோஷம்.

தேவையான பொருட்கள்:

    கீழாநெல்லிச்சாறு.
    உத்தாமணிச்சாறு.
    குப்பை மேனிச்சாறு.
    நல்லெண்ணெய்.


செய்முறை
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.


அல்லது 

மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

    மஞ்சள்.
    பூண்டு.


செய்முறை:
மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

    கிராம்பு.
    சீரகம்.


செய்முறை:
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.


அல்லது

கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

    கிராம்பு.

செய்முறை:
கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

அல்லது

குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

    குங்குமப்பூ.

செய்முறை:
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது 

டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    டீ. அல்லது காப்பி.
    எலுமிச்சை பழச்சாறு.


செய்முறை:
டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

அல்லது


தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

    தர்ப்பூசணி விதை.
    வெட்டிவேர்.


செய்முறை:
தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்


அல்லது

அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    அவுரி இலை.
    தேங்காய் எண்ணெய்.


செய்முறை:
அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

    சுக்கு.
    பால்.


செய்முறை:
சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.
குறிப்பு:
தாய்ப்பால் கிடைக்காமல் போனால் பசும்பால் பயன்படுத்தலாம். இருப்பினும் தாய்ப்பால் மிகவும் சிறந்தது.


அல்லது

வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்.

அறிகுறிகள்:

    தலைபாரம்.

தேவையான பொருட்கள்:

    வேப்பம் பிண்ணாக்கு.

செய்முறை:
வேப்பம் பிண்ணாக்கை எடுத்து சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்.

அல்லது

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து தூய நீர் விட்டு சுண்ட காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் மற்றும் தலைவலி குறையும். 

அறிகுறிகள்:

    மலச்சிக்கல்.
    தலைவலி.

தேவையான பொருள்கள்:

    நில ஆவாரை = 25 கிராம்
    கடுக்காய் தோல் = 50 கிராம்
    சுக்கு = 50 கிராம்
    மிளகு = 5 கிராம்
    சோற்றுப்பு = 4 கிராம்


செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தூய நீர் விட்டு சுமார் 300 மி.லி அளவுக்கு சுண்டியதும் இறக்கி விடவும்.
உபயோகிக்கும் முறை:

 காலை 5 மணி அளவில் 100 மி.லி கஷாயத்தை மட்டும் வடிகட்டி குடித்து சிறிது வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி குறையும்.


அல்லது 

கொதிக்கும் நீரில் சுக்கு தூள் மற்றும் கற்பூரத்தை போட்டு மூடி வைத்து பிறகு இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருள்கள்:

    சுக்கு = 10 கிராம்
    கற்பூரம் = 2 கிராம்


செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.



அல்லது

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து தடவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.

அறிகுறிகள்:

    தலைபாரம்.
    அஜீரண தலைவலி.

தேவையான பொருள்கள்:

    சுக்கு = 10 கிராம்
    மிளகு = 5 கிராம்
    வெள்ளைப்பூண்டு = 5 கிராம்


செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து சிறிதளவு எடுத்து நெற்றியின் இரண்டு பக்கத்திலும் தடவி பற்று போட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.


அல்லது

திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    திருநீற்றுபச்சிலை

செய்முறை:
திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும்.

வீடியோ எடிட்டிங் மென்பொருள்

CyberLink-PowerDirector-12-LE-download
CyberLink PowerDirector 12 LE எனும் இந்த மென்பொருள் மூலம் வீடியோ எடிட்டிங் இலகுவாக செய்யமுடியும்  இந்த மென்பொருளில் உண்மை  விலை $35 ஆனால் இப்போது முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றது 

வீடியோ எடிட்டிங்  என்றவுடன்  எல்லரோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது   சரி நீங்களும்  அன்றாடம் எடுக்கும்  வீடியோக்களை எடிற் செய்ய தேவை அற்றவைய நீக்கி  தெளிவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப  வடிவமைக்க கூடியவாறு நீங்களும்  தரவிறக்கி பயன்படுத்தி கொள்ள முடியும்  

Skype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமானவழி


எத்தனையோ அப்பிளிகேஷன்கள்  வந்தபோதிலும்  கணினி பாவனையாளர்கள் மத்தியில் முதலிடத்தில் இருப்பது Skype மென்பொருள் ஆகும்  இதில் இலகுவாகவும் தெரிவாகவும் வீடியோ மற்றும் குரல்வழி தொலைதொடர்பு கொள்ள முடியும் என்பது நாம் அறிந்த விடையமே 


அண்மைய காலமாக அதிகமான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ர்ந்து வரும் இந்த நிறுவனம் அண்மையில்  இந்த மென்பொருளை தரவிரக்காமலே பயந்படுத்தகூடிய வகையில் செய்துள்ளது   இப்போது சோதனையில் உள்ளதால் இலகுவாக firefox browser இல் தான் வேலை செய்கிறது  

( பதிவின் இறுதியில் ) கிழே உள்ள முகவரியில் சென்று உங்கள் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து நேரடியாகவே உங்கள் firefox browser இல் Skype ஐ பயன்படுத்தலாம் 

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் 

Saturday, October 17, 2015

தேமல் மறைய !

தேமல் மறைய !

முகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும்.
· பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.
· நாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.
· குமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.
· கற்றாழையை மேல் தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.
· பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குணமாகும்.
·துளசியிலையை உப்புடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் தடவி வந்தால் தேமல் மெல்ல மெல்ல மறையும்
சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் மறையும்.