Thursday, January 18, 2024

சர்க்கரை நோய் குணமாக

சர்க்கரை நோய் குணமாக 



பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய எந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால் இந்த பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும். எனவே இந்த பனங்கிழங்கை எந்தவித பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

வறட்டு இருமல் குணமாக சித்த மருத்துவம்

வறட்டு இருமல் குணமாக சித்த மருத்துவம் 



எலுமிச்சம் பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.

மூக்கடைப்பு குணமாக சித்த மருத்துவம்

மூக்கடைப்பு குணமாக சித்த மருத்துவம் 



ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இருவேளை குடித்து வர மூக்கடைப்பு தொல்லை குணமாகும்.

தீப்புண் குணமாக சித்த மருத்துவம்

தீப்புண் குணமாக சித்த மருத்துவம் 



வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டு வர விரைவில் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் ஆகியவை குணமாகும்.

மூலம் குணமாக சித்த மருத்துவம்

மூலம் குணமாக சித்த மருத்துவம் 



கருணைக் கிழங்கை கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட்டு வர மூலம் பிரட்சனைகள் குணமாகும்.

தேமல் குணமாக சித்த மருத்துவம்

தேமல் குணமாக சித்த மருத்துவம் 



வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.


சரும நோய்கள் குணமாக சித்த மருத்துவம்

 

சரும நோய்கள் குணமாக சித்த மருத்துவம் 



கமலா ஆரஞ்சை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, தினமும் சோப்புக்கு பதிலாக உடம்புக்கு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு தொல்லை குணமாக பாட்டி வைத்தியம்

மூச்சுப்பிடிப்பு தொல்லை குணமாக பாட்டி வைத்தியம் 



சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சுடவைக்கவும். பின்பு அவற்றை மூச்சிப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சிப்பிடிப்பு குணமாகும்.

பித்த வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்

பித்த வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்



கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவு எண்ணையில் காய்ச்சி தினமும் பூசி வர விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

சீத பேதி குணமாக பாட்டி வைத்தியம்

சீத பேதி குணமாக பாட்டி வைத்தியம்



தினமும் மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.

மலச்சிக்கல் குணமாக பாட்டி வைத்தியம்

மலச்சிக்கல் குணமாக பாட்டி வைத்தியம் 



செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

வயிற்று வலி குணமாக பாட்டி வைத்தியம்

வயிற்று வலி குணமாக பாட்டி வைத்தியம் 



வெந்தியத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

குடல் புண் குணமாக பாட்டி வைத்தியம்

குடல் புண் குணமாக பாட்டி வைத்தியம் 



மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.

செரிமானம் நன்கு அடைய பாட்டி வைத்தியம்

செரிமானம் நன்கு அடைய பாட்டி வைத்தியம் 



ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடிக்க செரிமானம் நன்கு அடையும்.

உதட்டு வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்

உதட்டு வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம் 



கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு பிரட்சனைகள் குணமாகும்.

வாய் நாற்றம் குணமாக நாட்டு மருத்துவம்

வாய் நாற்றம் குணமாக நாட்டு மருத்துவம் 



சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.

தொடர் விக்கல் குணமாக நாட்டு மருத்துவம்

 

தொடர் விக்கல் குணமாக நாட்டு மருத்துவம்



நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல்  குணமாகும்.

தொண்டை கரகரப்பு குணமாக நாட்டு மருத்துவம்

தொண்டை கரகரப்பு குணமாக நாட்டு மருத்துவம் 



சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தலைவலி குணமாக நாட்டு மருத்துவம்

தலைவலி குணமாக நாட்டு மருத்துவம்



10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.

நெஞ்சு சளி பிரச்சனைக்கு நாட்டு மருத்துவம்

நெஞ்சு சளி பிரச்சனைக்கு நாட்டு மருத்துவம்



தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவ நெஞ்சி சளி குணமாகும்.

Wednesday, January 17, 2024

எதையும் ஏற்றுக்கொள்.

ஏமாற்றங்கள் இன்று உனக்கு

நிகழ்ந்தாலும்,

நிம்மதின்றி தவித்தாலும்,

நீ உறங்காமல் விழித்துக்கொண்டு இருந்தாலும்,

உறவுகள் உன்னை ஒதுக்கி வைத்தாலும்,

உனக்கான நேரம் வரும். 

அதுவரை காத்திரு நிச்சயம் 

கடவுள் நல்வழிகாட்டுவார்....





ருத்ராட்சத்தை பராமரிக்கும் முறைகள்!

 ருத்ராட்சத்தை பராமரிக்கும் முறைகள்!


ருத்ராட்சத்தில் இயற்கையாகவே மின்காந்த சக்தி உள்ளது. அந்த சக்தி முழுவதும் நமக்கு கிடைக்க வேண்டும், அதனால் ருத்ராட்சத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க .

1. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை விபூதி சந்தனம் வைத்து மறைக்கக் கூடாது. 

2. மாதம் ஒரு முறை ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் அல்லது பசும் பாலில் 24 மணி நேரம் ஊற வைத்து, புதிய பிரஷ் கொண்டு தேய்த்து எடுத்து, தூய்மையான நீரில் கழுவி, துடைக்க வேண்டும்.

3. சோப்பை பயன்படுத்தக் கூடாது. ருத்ராட்சத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனில் சாணத்தில் தயாரித்த விபூதிக்குள் வைக்கலாம். ருத்ராட்ச மாலையை சுத்தப்படுத்தும்பொழுது இதற்கான கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை கூறவும். 

4. ருத்ராட்ச மாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும். 

ஓம் ஐயும் கிலியும் செளவும் ஸ்ரீயும் 

ஹரிம்ஓம் நமசிவாய ஓம் சிவநேத்ராய 

ருத்ராட்சாய நம… 

5. ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது தான் அதிகம் மதிப்பவரிடம் கொடுத்து வாங்கி, பின் அணிந்து கொள்ளவும். அவர்கள் காலில் விழுந்து வாங்கிக் கொள்ளவும். 

6. சிவன் கோவிலில் வைத்து அணிவது மிகவும் சிறப்பு. அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை காரணமில்லாமல் கழட்டக் கூடாது.

☝🌿 ஓம் நமசிவாய 🌿☝



























நினைவுகள்

ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பிவிட நினைக்கலாம் ஆனால், ஒரு சில இடங்களை வேறொருவரால் நினைவுபடுத்த மட்டுமே முடியுமே தவிர நிரப்பி விட முடியாது🥹