Saturday, October 17, 2015

தேமல் மறைய !

தேமல் மறைய !

முகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும்.
· பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.
· நாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.
· குமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.
· கற்றாழையை மேல் தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.
· பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குணமாகும்.
·துளசியிலையை உப்புடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் தடவி வந்தால் தேமல் மெல்ல மெல்ல மறையும்
சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் மறையும்.

No comments:

Post a Comment