Sunday, June 28, 2015

வாட்ஸ் ஆப் நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு தெரியுமானு பாருங்க, தெரியலைன்னா தெருசுக்கங்க..

News
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் இன்று குறுந்தகவலுக்கு பதிலாக வாட்ஸ் ஆப் தான் பயன்படுத்துகிறார்கள்.
இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை வாட்ஸ் ஆப் முதல் வருடத்திற்கு மட்டுமே இலவசம் அடுத்த வருடம் முதல் பணம் கட்டியே இவ்வசதியைப் பெற வேண்டும்.
ஆனால் இதனை நீங்கள் பைபாஸ் செய்து இலவசமாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.
முதல் வழி:
1) வாட்ஸப்பின் லைசென்ஸ் காலம் முடிந்த பிறகு, புதியதாக ஒரு gmail id உருவாக்குங்கள் அதன் வழியாக கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸப்பைத் தரவிறக்குங்கள்.
இப்பொழுது உங்கள் எண்ணைக் கொடுத்து நீங்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.
வாடஸ் ஆப் (whatsapp )முதல் வருடத்திற்கு பிறகு இலவசமாக பயன்படுத்த..
இரண்டாம் வழி:
2) உங்கள் வாட்ஸப்பின் லைசென்ஸ் முடியும் முன்பே, Whatsapp->settings->account->delete my account. என்பதை செலக்ட் செய்யவும் . உங்கள் கணக்கு அழிந்து விடும்.
நீங்கள் மீண்டும் உங்கள் எண்ணைக் கொடுத்து புதிய கணக்கு துவங்கலாம்.
ஆனால் இதனை வாங்கும் கட்டணம் மிகக் குறைவே எனவே வாங்கிவிடுதல் நலம்.

No comments:

Post a Comment