Tuesday, July 26, 2016

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம் என்பது வாலை தியானம்

காயத்திரி என்பது பல தேவதைகளுக்கும ஜெபிக்க படும் மந்திரங்களாகும் . இவற்றுள் முதன்மையானதும் அனைவராலும் அறியப்பட்டதும் , பிரம்ம ரிஷி ( சித்தர்களின் மிக உயர்நிலை ) விசுவாமித்திரர் அருளிய சூரிய காயத்திரியாகும் . ஆனால் இந்த மந்திரத்தில் சூரியன் என்ற வார்த்தை எங்கும் இல்லை . காயத்திரி என்ற வார்த்தை எங்கும் இல்லை . இந்த மந்திரத்தை ஆழமாக பார்ப்போம் .


காயத்திரி மந்திரம்

ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: பரசோதயாத்



இந்த சம்ஸ்கிருதத ஸ்லோகத்திற்கு தமிழ் பொருள் 

ஓம் என்ற பிரனவமாகவும் , பூர் புவ ஸுவ என்ற வியகிருதி யாகவும்(அகார, உகார மகார சக்தி வடிவாகவும் ), இருக்கின்ற யார் நம்முடைய புத்தியை தூண்டுகிறாரோ, அனைததுமாய் இருப்பவரான அந்த இறைவனின் சிறந்த ஒளிவடிவை தியானிப்போம்.

விளக்கம்

ஓ என்ற புள்ளியாகிய இறைவன் ஓம் என்ற பிரணவமாக பெரு வெடிப்பானான் . இந்த பிரணவம் அகார உகார மகார என்ற சக்தியாக விரிவானது . இந்த ஓங்காரம் விரிவடைந்து அகார உகார , மகர நாத விந்து சக்தியானது . . இது பஞ்ச வித்தாக , பஞ்ச பூதமாக விரிவானது . பஞ்ச பூதங்கள் நால்வகை யோனி எழுவகை பிறப்பாக இப்பிர பஞ்சமாக விரிவானது . இந்த பஞ்சபூத இறை சக்தி நமது புத்தியை செயல் படவைக்கிறது. இந்த இறை சக்தி பல வடிவாக இந்த பிரபஞ்சதில் உள்ளது அவற்றுள் மிக சிறந்த வடிவான ஒளி வடிவத்தில் இறைவனை தியானிப்போம் . இந்த விளக்கத்தில் காயத்திரியும் இல்லை சூரியனும் இல்லை.

வேதாந்த விளக்கம் : காயத்திரி வந்தவிதம் .
இந்தமந்திரம் இறைவன் பிரபஞ்சமாக உருவெடுத்ததர்க்கு முன் “பூர் புவ ஸுவ “ என்ற சக்தி வடிவாக இருந்தான் என்கிறது. அதுவே வியாகிருது. அந்த சக்தி வடிவிற்கு ஆதி சக்தியாக தெய்வமாக வேதாந்திகள் உருவகப்படுத்தினர் . இந்த ஆதி சக்தி,சிவன் விஷ்ணு , பிரம்மா ஆகியவர்களுக்கு சக்தி வழங்கியது . அதனால் இவர்கள் அழித்தல் , காத்தல்,படைத்தல் ஆகிய தொழில் செய்கின்றனர் . இதனால் பிரபஞ்சம இயங்குகிறது . இந்த ஆதி சக்தி= சவிது அல்லது சவிதா = காயத்திரி என்று பெயர் பெற்றது . . இந்த காயத்திரி பிரபஞ்சமாக விரிந்தது . ஒளி வடிவானது . இறைவன் காயத்ரி என்ற சக்தியாக இறைவனின் பல வடிவுகளில் சிறந்த ஒளிவடிவில் இருக்கிறான், இறைவனை ஒளிவடிவில் தியானிப்போம் .. இறைவனை ஒளிவடிவில் தியானிக்க இந்த மந்திரம் சொல்கிறது . நமக்கு பிரகாசமான ஒளியை தருவது சூரியன் என்று கருதி இதை சூரிய காயத்திரி என்று அழைகிறார்கள் . இதன் பொருள் புரியாதவர்கள் காயத்திரி என்பது சூரிய தியானம் என்று பொருள் செய்கிறார்கள்.

இம் மந்திரத்தில் சித்தர்களின் வாலை வந்தவிதம் .

போகர் ஜனனசகரம் என்ற நூலில் பாடல் 7 லில் பிரபஞ்சத்தில் இறைவன் வாலையாக பரஞ்சோதியாக . இருப்பதாக சொல்கிறார்.

உறைகிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா
ஒருவனுமே வல்லவட பரமமப்பிரமம்


போகர் ஜனனசாகரம் பாடல் 3

சிருஷ்டித்த கலையதுதா நெத்தனையோ சொல்லும்
திரண்டதொரு விபரமது தெரிய சொல்லும் .
மட்டித கலை யதுதான் னைமூன்றப்பா
வதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே
வட்டித்த கலையதுதான் வாலையாகி
வந்ததட முகம் ஐந்து கையும் பத்தாய்
எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா
ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே 

போகர் ஜனனசாகரம் பாடல் 7


பொருள் விளக்கம்

ஆதியில் ஆதி சித்தன் என்ற இறைவன் ( ஒ=ஓம் ) ஒருவன் உண்டு. அவன் பர பிரமம் . அவன் ஓம் என்ற பிரணவமாக சக்தியை படைதான்( சக்தி=சவிது = காயத்திரி = வாலை) அதன் சக்தி மூவைந்து (“பூ புவ ஸுவ) கலை அளவு . இந்த சக்தி என்ற கலைதான் வாலை. இந்த வாலை ஐந்து முகமாக பஞ்சபூதமாகவும் பத்து கைகள் என்ற தச வாயுக்களாகவும் இருக்கிறது . இந்த வாலை தான் எனக்கும் உனக்கும் மூலமான பரஞ் ஜோதி ஆகிய இறைவன்.

பர பிரம்மம் என்ற ஆதி சித்தன், சக்திவடிவில் வாலை என்ற ஒளியாக பரஞ்ஜோதி யாக உள்ளான் . இந்த வாலை , பஞ்சபூதமாக இப்பிரபஞ்சமாக உருவானது . . ஆக இறைவன் வாலை என்ற ஒளிவடிவாக பிரபஞ்சவெளியில் இருக்கிறான் . அதாவது பிரபஞ்சம உருவாவதில் இறைவனின் முதல் நிலை சக்தி =சவிது=காயத்திரி = வாலை = ஒளி.

இந்த இறைவனை மௌன யோகத்தில் ( உயர்நிலை வாசி யோகம் ) பர வெளியில் காணலாம் .
இது பிரபஞ்சவாலை இதை சித்தர்கள் உண்மனிதாய் என்பார்கள் . பரவெளியில் இறைவனை ஒளிவடிவில் காண்பது ஒருவகை முக்தி .

எனவே காயத்திரி மந்திரம், இறைவனை வாலை தியானம் என்ற ஒளிவடிவில் தியானம் செய்ய சொல்கிறது . இது சித்தர்கள் கோட்பாடு . விசுவாமித்திர சித்தனால் சொல்லப்பட்டது .

இந்த பிரபஞ்ச வலை மனிதனுக்கு உள்ளே ஒளியாக , இறைவனாக உள்ளாது . இதை வாலை பெண் என்றும மனோன்மனிதாய் என்றும் சித்தர்கள் பரிபாசையாக சொல்லுவார்கள் . இதை பூரணம் என்றும் சொல்லுவார்கள் சித்தர்கள் வணங்குவது அல்லது தியானிப்பது நம்முள் ஒளிவடிவில் இருக்கும் இறைவன் . .வாசி யோகத்தில் நம்முள் வாலை என்ற ஒளிவடிவில்இருக்கும் இறைவனை தியானிப்போம் காண்போம் . இதுவும் முக்க்தியில் ஒருவகை.

No comments:

Post a Comment