முட்டைகோஸ் பயன்கள்
முட்டைகோஸில்
வைட்டமின் சி மற்றும் பி உள்ளன. முட்டை கோஸில் உள்ள சல்பர், மற்றும்
அயோடின் ஆகியவை வயிறு, குடல் மற்றும் குடற் சவ்வு போன்ற உறுப்புகளை
சுத்தப்படுதுகின்றன மற்றும் புண்களை நிவர்த்தி செய்கிறது.
முட்டைகோஸில்
உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும் , மலக்குடலையும் நன்கு
வேலை செய்ய உதவுகின்றன இதனால் மலம் இலகுவாகக் கழிவதுடன் மூலம்,பவுந்தரம்
போன்ற கோளாறுகள் வரமால் தடுக்கின்றன.
முட்டைகோஸில்
டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள
மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது எனவே உடல் எடையை
குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.
வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
100 கிராம் முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்கார்போஹைட்ரேட் 5.8g
சர்கரை 3.2 g
டையட்டரி ஃபைபர் 2.5g
கொழுப்பு 0.1g
புரதம் 1.28g
வைட்டமின் பி1 0.061 mg
வைட்டமின் பி2 0.040 mg
வைட்டமின் பி3 0.234 mg
வைட்டமின் பி5 0.212 mg
வைட்டமின் பி6 0.124 mg
வைட்டமின் பி9 43 micro gram
வைட்டமின் சி 36.6mg
வைட்டமின் கே 76 micro gram
கால்சியம் 40 mg
இரும்பு சத்து 0.47 mg
மக்னீசியம் 12 mg
மாங்கனிஸ் 0.16 mg
No comments:
Post a Comment