Sunday, October 19, 2014

நூக்கல் காயின் பயன்கள்

நூக்கல் காயின் பயன்கள்

நூக்கல் காயின் பயன்கள்நூக்கல் என்று அழைக்கப்படும் இந்தக் காய் வெள்ளை கலந்த பச்சை நிறத்தில் உருண்டையாக இருக்கும். இது குளிர்பிரதேசத்தில் வளரக் கூடிய ஒருவகை காயாகும். இதில் உயிர்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்பும் நிறைந்துள்ளது.

இதில் வெஜிடபிள் சூப் செய்யவும் வெஜிடபிள் பிரியாணி செய்யவும் பெருமளவு இந்த காயை பயன்படுத்துவர். நூக்கல் சற்று கடினமான காயாகும் எனவே நன்கு வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனை நூற்கோல் என்றும் அழைப்பதுண்டு.

இதில் வைட்டமின்களும் புரத சத்தும் நிறைந்துள்ளது. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது.

குழந்தை பெற்ற பெண்கள் இந்த பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது. ஜீரண சக்தியை ஏற்படுத்தும், நரம்புகளை வலுப்படுத்தும், குடல் நாளங்களை உறுதிப்படுத்தும். எலும்புகளை உறுதியாக்கும்.

No comments:

Post a Comment