Sunday, October 19, 2014

நெல்லிக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்

நெல்லிக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்

நெல்லிக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது காய வைத்து பதப்டுத்திய 150 கிராம் நெல்லிக்காயில் 2428 மில்லி கிராம் முதல் 3470 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காயை நறுக்கி நிழலில் உலர்த்தி பொடியாக்கினாலும் 780 முதல் 2600 மில்லி கிராம் வரை வைட்டமின் சி இருக்குமாம்.

நூறு கிராம் நெல்லிக்காயில்…
81.8 சதவிகிதம் ஈரப்பதமும்,
0.5 சதவிகிதம் புரோட்டினும்,
0.1 சதவிகிதம் கொழுப்பு சத்தும்,
0.5 சதவிகிதம் தாது பொருளும்,
3.4 சதவிகிதம் நார்ச்சத்தும்,
13.7 சதவிகிதம் கார்போஹைடரேட்டும் இருக்கிறது,
50 மில்லி கிராம் காலசியம்,
20 மில்லி கிராம் பாஸ்பரஸ்,
12 மில்லி கிராம் இரும்புச் சத்தும்,
600 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 600 வைட்டமின் பி காம்பளக்ஸ் அடங்கியுள்ளது..
நெல்லிக்காய் மலத்தை இளக்குவதற்கும் , சிறுநீரை பிரிக்கவும் உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டால் பல நோய்களை எதிர்க்கும் வல்லமை உடலுக்கு கிடைக்கும். இதனை தினமும் காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் விரைவில் வலுவடையும் நெல்லிக்காய் பசுமையுடன் கிடைக்காத பட்சத்தில் காய்ந்த நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment