கல்யாண முருங்கையின் பயன்கள்
கல்யாண
முருங்கை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, கோழை, பித்தம்
மற்றும் வெப்பம் அகற்றியாகவும் பயன்படுகிறது. மாதவிலக்கு காலங்ளில்
கடுமையான வலி இருப்பவர்கள் இவ்விலையின் சாற்றை 50 மில்லி 10 நாள்
சாப்பிட்டு வர வலிதீரும் மேலும் தாமதித்த மாதவிலக்கு உள்ளவர்கள் கல்யாண
முருங்கை இலையை கருப்பு எள் ஊர வைத்த தண்ணீரில் அரைத்து காலை மற்றும் மாலை
நேரங்களில் சாப்பிட்டால் குணமடையலாம். பால் சுரப்பு குறைவாக உள்ள பெண்கள்
இந்த கல்யாண முருங்கையை உணவில் சேர்த்துக்கொண்டால் பால் அதிகமாகச்
சுரக்கும்.
கல்யாண முருங்கையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி குணமடையும்.
கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு பூண்டு ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட ரத்த சோகை நிவர்த்தியாகும்
சொறி ,
சிரங்கு போன்ற நோய்களுக்கு இந்த இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து
பூசினால் குணமடையலாம் அல்லது இந்த இலை சாறுடன் தேங்காய் மஞ்சள் சேர்த்து
அரைத்து குளிக்கும்பொழுது மேல் பூச்சாக பூசி குளிக்க சொறி , சிரங்கு
குணமாகும்.
No comments:
Post a Comment