பேஸ்புக் நிறுவனத்தினால் வாங்கப்பட்டு தற்போது மிகவும் பிரபல்யம் அடைந்துவரும் Instagram சமூகவலைத்தளத்தினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்பதிப்பில் Instagram தளத்தில் பதிவேற்றப்படுபவற்றினை தானாகவே பேஸ்புக் தளத்தில் பகிரும் வசதி நீக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் Instagram இனை பயன்படுத்துவதுடன், இவர்களில் அதிகமானவர்கள் மொபைல் சாதனங்களிலேயே இவ்வலைத்தளத்தினை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment