அமெரிக்காவில் வசித்துவந்த இளைஞர் ஒருவர், தென் அமெரிக்க பழங்குடி இனத்தவர்களுடன் அரை நிர்வாண நிலையில் வசிக்கும் தனது தாயுடன் மீண்டும் இணைந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. வெனிசூலாவிலுள்ள பழங்குடியை வம்சாவளியைச் சேர்ந்த யரிமா என்ற 30 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க மாணுடவியல் பேராசிரியரான கென்னத் குட் என்பவரை திருமணம் செய்தவர். தானும் அந்த பழங்கு இனத்தைச் சேர்ந்தவர் என கென்னத் குட் கருதினார்.
19 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து வெனிசூலாவுக்குத் திரும்பிய யரிமா மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பாமல் தனது யனோமமி எனும் பழங்குடி சமூகத்தவர்களுடனேயே தங்கிவிட்டார். அப்பழங்குடி இனத்தவர்களின் கலாசாரத்துடன் அவர் ஒன்றிப்போய்விட்டார்.
இதேவேளை, அமெரிக்காவில் பிறந்த அவரின் மகன்களில் ஒருவரான டேவிட் குட், தான் பழங்குடியினத்தை சேர்ந்தவன் என்பதை தனது சகாக்களுக்கு அறிவிக்க சங்கடப்பட்டுக்கொண்டிருந்தார். தனது தாய் குறித்து விசாரித்தவர்களிடம் அவர் இறந்துவிட்டதாக கூறிவந்தார்.
டேவிட் குட்டுக்கும் அவரின் தாயாருக்கும் இடையிலான தொடர்புகளும் விடுபட்டு போயின. ஆனால், தென் அமெரிக்க பழங்குடி இனத்தவர்கள் தொடர்பான ஆவணப் படமொன்றில் தனது தாயார் இருப்பதைக் கண்ட டேவிட் குட், தனது தாயாரைத் தேடிச் சென்றார். அங்கு தனது தாயாரைக் கண்ட டேவிட் குட், தற்போது யனோமமி பழங்குடியினரின் கலாசாரத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளாராம்.
No comments:
Post a Comment