முற்றிலும் ரோபோக்களை கொண்ட இசைக்குழுவொன்று ஜேர்மனியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கொம்பிரஸர்ஹெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைக்குழுவில், 5 அடி உயரமான 3 ரோபேக்கள் அங்கம் வகிக்கின்றன. ட்ரம்ஸ், கிட்டார், பாஸ், இசைக்கருவிகளை இசைக்கின்றன. மொஸ்கோவில் நடைபெறும் சர்வதேச அன்ட்ரோய்ட் கண்காட்சியின்போது இந்த ரோபோக்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகில் ரோபோக்களை மாத்திரம் அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரேயொரு இசைக்குழு இதுவாகும் கழிவு உலோகங்கள் மூலம் இந்த ரோபோக்கள் நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இசைக்குழுவின் யுஉந ழக ளியனநள எனும் பாடல் யூ ரியூப் இணையத்தளத்தில் 63 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்வையிடப்பட்டுள்ளது. (படங்கள்: ரோய்ட்டர்ஸ்)
No comments:
Post a Comment