அமெரிக்காவில் இரட்டை பிறவியாய் பிறந்த சகோதரிகள், கைப்பேசி, பேஸ்புக், உணவு மற்றும் காதலன் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஏமி மற்றும் பெக்கி கலாஸ் (46) தங்கள் பேஸ்புக் கணக்கு, படுக்கை அறை, கைப்பேசி, அவர்கள் செய்யும் தொழில் ஆகிய அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் காதலனையும் பகிர்ந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால், ஒரே மாதிரி ஆடைகளை வெவ்வேறு நிறத்தில் அணிகின்றனர். தற்போது இவர்களுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் நல்ல வாழ்க்கை துணையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள், தாங்கள் சாப்பிடும் உணவு அனைத்தையும் அளந்து சமமாக உண்பதால், அவர்கள் இடையும், உடல் அமைப்பும் ஒரே மாதிரி உள்ளது. இதுகுறித்து இவர்கள் கூறுகையில், நாங்கள் சந்தோஷமாக எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்றும் இருவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைய ப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment