பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம்,
வயதாகும்போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. 140 என்பது இதயம்
சுருங்கும்போது உள்ள ரத்த அழுத்தம். 90 என்பது இதயம் விரிவடையும்போது வரும்
ரத்த அழுத்தம். இதயம் விரியும்போது ரத்த அழுத்தம் உயர்ந்தால் அதாவது 90-ஐ
தாண்டி 100-110 என அறிவித்தால் ஆபத்து என்பதை உணரலாம். மேல் கணக்கு 140-ஐ
தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம்.
தாய் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, சரியாகத் தூக்கமின்மை மற்றும் சிறுநீரக இயக்கம் சரியில்லாமல் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
சேர்க்கவேண்டியவை: தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம். மதிய உணவில் 5 – 10 பூண்டுப்பற்கள், 50 கிராமுக்குக் குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.
சீரகத்தை லேசாக வறுத்து அதை மூன்று நாட்கள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாட்கள் எலுமிச்சைச் சாறிலும் இன்னும் மூன்று நாட்கள் கரும்புச்சாறிலும் ஊறவைத்து உலர்த்திப் பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடைகளில் சீரக சூரணமாகவும் கிடைக்கும். வெந்தயத்தை தினமும் பொடித்து சப்பிடலாம்.
தவிர்க்கவேண்டியவை: பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால், மிகச் சிறிதளவே உப்பு சேர்த்தால் போதுமானது. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் உப்பை மறந்தே தீரவேண்டும். புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. ஊறுகாய், இட்லி மிளகாய்ப் பொடி, அப்பளம்.

No comments:
Post a Comment