Thursday, November 29, 2018

உடல் ஆரோக்கியம்

1.ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 20-25 நிமிடம் ஓடினால் கட்டாயம், ஆரோக்கியமான வழியில் 1 கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.

2.தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து அன்றைய தினத்தை ஆரம்பித்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடனும், ஸ்மார்ட்டாகவும் செயல்பட முடியும்.

3.புகைப்பிடிப்பவர்கள் தினமும் பால் டீக்கு பதிலாக, ப்ளாக் டீ குடித்து வந்தால், நுரையீரல் பாதிக்கப்படுவதை ஓரளவு தடுக்கலாம்.

4.தூங்கும் முன் உடற்பயிற்சியை செய்தால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கலாம்.

5.ஆய்வு ஒன்றில், வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்கள், ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவர்களை விட சில வருடங்கள் அதிகமாக வாழ்வதாக தெரிய வந்துள்ளது. எனவே ஹோட்டலில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.

6.காலையில் எழுந்ததும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு காப்ஃபைன் நிறைந்த காபி அல்லது டீ குடிப்பதை விட, குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பது மிகவும் சிறந்தது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

7.ஒருவர் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தினமும் 7-8 மணிநேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.


குறிப்பு


எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள்...




No comments:

Post a Comment