Sunday, December 2, 2018

மன அழுத்தம்


மன அழுத்தம்

இன்று பலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை, மன அழுத்தம்; இதற்கு, வாழும் சூழ்நிலை, பிரச்னையை எதிர்கொள்ள இயலாமை மற்றும் எதற்கும் உணர்ச்சி வசப்படுவது போன்றவையே காரணங்கள்.
மன அழுத்தம் இருப்பதை கீழ்கண்ட அறிகுறிகளால் அறியலாம்...

* எதிலும் ஆர்வமிருக்காது; கவனக் குறைவும், தகவல்களை நினைவு கொள்வதிலும் சிரமம் இருக்கும்.
* எப்போதும் களைப்பு மிகுந்திருக்கும்.
* 'நான் எதற்குமே லாயக்கில்லை; கையாலாகாதவன்...' என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களும், 'எனக்கு எதுவுமே சரியில்லை; நான், துரதிருஷ்டம் பிடித்தவன்...' போன்ற உணர்வுகளில் மனம் பேதலிக்கும்.
* தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம்.
* பசி எடுக்காது; சாப்பிடப் பிடிக்காது அல்லது எதையாவது உள்ளே தள்ளியபடி இருக்கத் தோன்றும்.
* தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி மற்றும் ஜீரணக்கோளாறு போன்றவை தொடர்ந்து படுத்தும். இதற்கு, ஏதாவது மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்காது.
* அடிக்கடி, தற்கொலை எண்ணங்கள் தலைதூக்கி, வேதனைப்படுத்தும்.
* மனச்சோர்வு பீடித்திருப்பவர்களில் பத்தில் ஒரு நபர், தற்கொலை செய்து கொள்கிறார்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.


நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுக்கும் இதை  பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment