Wednesday, March 25, 2015

ஒரே வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ உடல் எடையை குறைக்கும் ஜிஎம் டயட் (GM Diet) வழிமுறை!

ஒரே வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ உடல் எடையை குறைக்கும் ஜிஎம் டயட் (GM Diet) வழிமுறை!

gm dietஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.
அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த (General Motors: Weight Loss Diet Program) பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் வழிமுறை தற்போது உலகம் முழுவதும் பலராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” நிறுவனம் அங்கீகரித்துள்ள இம்முறை மூலம் ஒரு வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களும் இம்முறையை பயன்படுத்தியே உடல் எடையை குறைத்துள்ளனர்.
எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும்.
சரி இனி அந்த வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்:-
நாள் 1
நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் முக்கியமாக வாழைப்பழத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம். குறிப்பாக தர்பூசணி சற்று அதிகமாக எடுத்துகொள்வது நல்லது.
நாள் 2
இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கை பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நாள் 3
மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
நாள் 4
நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதிகபட்சமாக எட்டு வாழை பழங்களும் மூன்று கிளாஸ் பாலும் உட்கொள்வது நல்ல பயனைத் தரும். இரவு வேளையில் அளவாக வெஜிடபிள் சூப் எடுத்துக்கொள்ளலாம்.
நாள் 5
இன்று அசைவ நாள். நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் அளவாக பீப் (மாட்டு கறி) மற்றும் ஒரு பெரிய தக்காளி உட்கொள்ள வேண்டும்.
நாள் 6
ஆறாம் நாளில் ஒரு கப் சாதம் உட்கொள்ளலாம். இதுதவிர அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மாட்டுக்கறியையும் (பீப்) சற்று அதிகமாகவே சாப்பிடலாம். ஆறாம் நாள் இறுதியில் நிச்சயம் உங்கள் உடல் எடையில் மாற்றத்தை உணர்வீர்கள்.
நாள் 7
இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.
இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்:
ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன்படும்.
உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் ! எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் 

No comments:

Post a Comment