Wednesday, March 25, 2015

வாட்ஸ்அப்பில் இலவச வாய்ஸ் கால் சேவை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வாட்ஸ்அப்பில் இலவச வாய்ஸ் கால் சேவை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
whatsapp-voice-calling
இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப் பயனாளிகளில் 10 சதவீதம் ஆகும். இதனால் அதில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த முடிவு செய்து கடந்த ஒரு ஆண்டாகவே இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்களுக்கு மட்டுமே பேசும் வசதியை கொடுத்து பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்தது வாட்ஸ்அப்.
இதனால் இந்த வசதி கிடைக்காத பலர் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்நிலையில் அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் விதமாக ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்போர் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப். இந்த அப்ஸ்-ஐ கூகுள் ப்ளேஸ்டோர் (2.11.528) மற்றும் வாட்ஸ்அப் (2.11.531) தளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே வாட்ஸ்அப் பேசும் வசதியை பயன்படுத்தி வரும் ஒருவர், உங்களுக்கு கால் செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை நீங்களும் பயன்படுத்த தொடங்கலாம்.

No comments:

Post a Comment