பெண்ணே!! நீயின்றி
தனியாய் நான்
தவியாய் தவிக்கிறேன்..!
துணையாய் நீ வந்தால்
துடியாய் துடிப்பேன்..!
அன்பை நீ கேட்டால்
மாரி என பொழிவேன்..!
முத்தம் நீ கேட்டால்
சரமாரி அதை தருவேன்..!
உயிரை நீ கேட்டால்
சுகமாய் அதை விடுவேன்..!
தஞ்சம் என வந்தால்
நெஞ்சம் அதை தருவேன்..!
மஞ்சம் வர மறுத்தால்
கொஞ்சம் நான் தவிப்பேன்..!
வஞ்சம் நீ புரிந்தால்
எச்சம் என உமிழ்வேன்..!
வெட்கம் நீ கொண்டால்
துக்கம் அதை அடைவேன்..!
எப்போதுமே
உடல் வெப்பம் நீ தந்தால்
சொர்க்கம் அதை அடைவேன்..!
அதையே
நித்தம் நீ தந்தால்
தூக்கம் அதை மறப்பேன்..!
என்றும்
எப்போதுமே
உடல் வெப்பம் நீ தந்தால்
சொர்க்கம் அதை அடைவேன்..!
அதையே
நித்தம் நீ தந்தால்
தூக்கம் அதை மறப்பேன்..!
என்றும்
பக்கம் நீ இருந்தால்
உலகம் அதை ஆள்வேன்..!
No comments:
Post a Comment